Friday 3rd of May 2024 07:56:46 AM GMT

LANGUAGE - TAMIL
அருண் பிரசாத்
இளம் இயக்குநர் சாலை விபத்தில் மரணம்!

இளம் இயக்குநர் சாலை விபத்தில் மரணம்!


இளம் இயக்குநர் அருண் பிரசாத் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிந்துள்ளதையடுத்து தமிழ்த் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பல திரைப்படங்களில் பணியாற்றி வந்த வெங்கட் பக்கார் என்கிற அருண் பிரசாத் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 4ஜி திரைப்படத்தை முதன் முதலாக இயக்கி அறிமுக இயக்குநராக முத்திரை பதித்த அருண் பிரசாத் படம் வெளிவருவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் அருண் பிரசாத் இன்று மேட்டுப்பாளையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த லொரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE